கறுப்பு வஸ்திரம் சனி பகவானின் வஸ்திரம் ஆகும். இதனை தானம் கொடுத்தால் வெற்றியைத் தருவார்.தொல்லை தரும் பிரச்சனைகள் விலகும்.
கருப்பு நிறம் உள்ளவர்களுக்கு உதவி செய்தால் சனி பகவானுக்கு ப்ரீதியாகும்
சனி திசை அல்லது பூசம் அனுஷம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உதவி செய்தால் சனி பகவான் அருள் முழுவதும் கிடைக்கும்.
கரு நீல கல் பதித்த வெள்ளி மோதிரம் கல் விரலில் படும் படி அணிய சனி பகவான் தோஷங்கள் விலகும்.7 -1/2 சனி , அர்த்தாஷ்டம சனி,அஷ்டமச் சனி தோஷங்களும் விலகும் அற்புதமான பலன்கள் உண்டாகும்.
கருப்பு நிறமுள்ள காகத்திற்கு உணவு வைத்தாலும் சனி பகவானுக்கு ப்ரீதியாகும்.
சனிக்கிழமை எள்ளு சாதம் செய்து நவக்கிரக சன்னதியில் சனி பகவானுக்கு படைத்து விட்டு,பிறருக்கு தரலாம். காகத்திற்கு வைக்கலாம்
தன் வயதளவு எள்ளுருண்டையை வாங்கி ,சனிக்கிழமையன்று சனி பகவானை வழிபட்டு விட்டு அங்கிருப்பவர்களுக்கு கொடுக்க ப்ரீதியாகும்.
சனிக்கிழமைகளில் பிறருக்கு செருப்பை வாங்கிக் கொடுத்தால் சனிப் ப்ரீதியாகும்.
சனிக்கிழமை காலை 6-7 சனி ஹோரையில் சனிஸ்வர காயத்ரி 108 முறை சொல்லவும்.நிச்சயம் சனி தசை முழுவதும் நல்ல பலனைத் தரும். சனி தசை சனி புத்தி முழுவதும் செய்யவும்.
சனிக்கிழமையன்று சனி பகவானுக்கு கருங்குவளைப் புஷ்பத்தால் அர்ச்சனை செய்து வர சனிப் ப்ரீதியாகும்.
சனிக்கிழமை அன்று உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் செய்யவும்.ப்ரீதியாகும்.
தங்களின் நட்சத்திரம் அன்று வன்னிமரத்திற்கு தேங்காய் பழம் வைத்து தூபம்,தீபம் காண்பித்து வழிப்படவும். தொடர்ந்து வன்னி மரத்தை 27 தடவை வலம் வரவும்.இப்படி ஒவ்வொரு மாதத்திலும் தங்களின் நட்சத்திரம் அன்று வழிபடவும். சனியின் நட்சத்திரம் பூசம்,அனுஷம், உத்திரட்டாதியில் பிறந்தவர்கள் ,சனி மகாதசை, சனி புத்தி நடப்பவர்களுக்கும் நல்ல பலன் நிச்சயமாக நடக்கும்.
வேத சிவாகம வித்யா பூஷணம் ஜோதிடர் குருஜி ஸ்ரீ ராஜீவ் சிவம்
Comments