பயமுறுத்திப் பண்படுத்தும் சனிபகவான் ! ‘‘நவகிரகங்களிலும் நாம் அதிகமாக பயப்படுவது சனி பகவானுக்கு மட்டும்தான். இவரைப் பிடிக்காது நமக்கு. அதே சமயம், இவர் நம்மைப் பிடித் துக்கொண்டு விடுவாரோ என்கிற பயமும் உண்டு. கோயில்களிலும் நவகிரக சந்நதியைவிட, தனியாக சனிபகவான் வீற்றிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், இந்த சந்நதியில்தான் கூட்டம் அதிக மாக இருக்கிறது. அந்த அளவுக்கு, நமக்கு பயம்! அதனால்தான், திருநள்ளாறுக்குச் சென்றால்கூட, சனிபகவானுக்கே முக்கியத்துவம் தருகிறோம். ‘‘திருநள்ளாறில் இருக்கும் சுவாமி பெயர், தர்பாரண் யேஸ்வரர்’’ என்று சொல்ல, நமக்குத் தெரியவில்லை. தர்பாரண்யேஸ்வரர் என்னும் சிவபெருமானை ஒதுக்கி விட்டு, சனிபகவானிடம்தான் மனம் பதிகி றது. உள்ளே போய், தர்பாரண்யேஸ்வரரைத் தரிசிப்போம் என்ற எண்ணமே இருக்காது. அந்த அளவுக்கு, சனிபகவானிடம் பயம்! ஆனால், நம்மை சோதனைக்குள்ளாக்கி, நம்மைத் துன்புறுத்தி மகிழ்வதில் பகவான் எனப் போற்றப்படும் சனிக்கு என்ன சுகம் இருக்க முடியும்? ஒரு மாணவனுக்கு பரீட்சை போலத்தான் அவர் நமக்களிக்கும் சோதனைகளும். அதுவரையிலான அனுபவ அறிவை வைத்து இதுபோன்ற சோதனை...