Skip to main content

அர்ச்சனை_பொருட்களும்_அர்த்தங்களும்

#அர்ச்சனை_பொருட்களும்_அர்த்தங்களும்



🌺 அர்ச்சனை, ஆராதனை இரண்டும் இறைவனுக்கு மிக முக்கியமாகும். 

எங்கும், எதிலும் நிறைந்தவன் இறைவன். நிம்மதி தேடி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சாமிக்கு அர்ச்சனை செய்ய தேங்காய், வாழைப்பழம் என நிறைய பூஜை பொருட்கள் வாங்கி சென்று இறைவனை தரிசித்து வருகின்றனர். 

இறைவனுக்கு ஏன் அர்ச்சனை பொருட்களை வைத்து படைக்கின்றனர் என்று தெரிந்துக் கொள்வது அவசியமாகும்.

#தேங்காய் :

🌺 தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும், கடினமாகவும் இருக்கும். 

அதை இரண்டாக உடைக்கும் போது வெண்மையான தேங்காய் பருப்பும், இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது. 

அதுபோல் அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும் பொழுது வெண்மையான மனமும், அதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் இனிமையாகவும், அன்பாகவும் இருக்கும்.

#விபூதி :

🌺 நாமும் ஒரு நாளைக்கு சாம்பல் ஆகப்போகிறோம். 

ஆதலால் நான் தான் என்ற அகம்பாவமும், சுயநலமும், பொறாமையும் இருக்ககூடாது என்ற எண்ணத்தையும், சிந்தனையையும் நமக்கு உணர்த்தவே, விபூதியை நெற்றியிலும், உடம்பிலும் பூசிக்கொள்கிறோம்.

#வாழைப்பழம் :

🌺 வாழைப்பழத்தின் நடுவே கருப்பு நிறத்தில் மிகச்சிறியதாக விதைகள் இருக்கும். 

ஆனால் முளைக்காது. ஆதலால் எனக்கு இந்த பிறவியிலேயே முக்தியை கொடு வேறு பிறவி வேண்டாம் என அருள் பெறவே வாழைப்பழத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம்.

#விளக்கு :

🌺 ஒரு மின்சார விளக்கினால் மற்றோரு மின்சார விளக்கை ஒளிர வைக்க முடியாது. 

ஆனால் ஒரு அகல் விளக்கினால் மற்றொரு அகல் விளக்கை ஒளிர வைக்க முடியும். 

அதுபோல் நாம் வாழ்ந்தால் மட்டும் போதாது, அடுத்தவரையும் வாழ வைக்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவே அகல் விளக்கை ஏற்றுகின்றோம்.

🌺 எந்த ஒரு பொருளும் இறைவனுக்கு படைக்கும் போதும், ஏன் அந்த பொருளை படைக்கிறோம் என்று தெரிந்துக்கொள்வது மிக முக்கியமாகும்.

Sri Rajiv sivam-09894798969



Comments

Popular posts from this blog

லக்ஷ்மி நரசிம்மரை வழிபடுவதால் அப்படி என்ன பலன் கிடைத்து விடும்?

*ஸ்ரீ நரசிம்மர் வழிபாடு:-* -------------------------------- *1. நரசிம்மரைத் தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.* *2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு     8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.* *3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி,    உயர் நிலையைப் பெற்றன.* *4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ``சிங்கவேள்குன்றம்'' என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.* *5. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.* *6. நரசிம்மருக்கு.   நர சிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன்,* *சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.* . *7. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை.ஆனால் நரசிம்ம...

Venkadugu

குடும்ப அமைதிக்கு வெண்கடுகு..!!! ************************************* சமீபத்தில் நான் ஒரு சுவையான செய்தியைப் படித்தேன். அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு உபாசகர் கூறிய செய்தி இது ''பல குடும்...

ஆன்மீக ரகசியம்

♥ஆன்மிக - ரகசியங்கள் ♥செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்? செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நா...