Skip to main content

வெற்றியாே தாேல்வியாே இதை நினைவில் காெள்ளுங்கள்

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.

எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.

வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?

வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?

எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?

வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?

இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல.* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.

*வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.*

*தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *சோர்ந்து விட மாட்டீர்கள்.*

*நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது அவர்களை *கௌரவிப்பீர்கள்.* அவர்கள் விலகும் போது பெரிதாக *பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.*

*தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். தானாகப் *பொறுமை வரக்* காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.

*நெற்றி சுருங்கும் போதெல்லாம் "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுருக்கம் போய் *முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.*

நினைவில் கொள்ளும் அவசியமே இல்லாமல் வாழ்க்கையின் ஜீவநாதமாக அந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால் அந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்.

வாழ்க வளமுடன்...

Sri Rajiv sivam -09894798969
Sri Rajiv sivam - 09894798969

Comments

Popular posts from this blog

லக்ஷ்மி நரசிம்மரை வழிபடுவதால் அப்படி என்ன பலன் கிடைத்து விடும்?

*ஸ்ரீ நரசிம்மர் வழிபாடு:-* -------------------------------- *1. நரசிம்மரைத் தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.* *2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு     8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.* *3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி,    உயர் நிலையைப் பெற்றன.* *4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ``சிங்கவேள்குன்றம்'' என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.* *5. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.* *6. நரசிம்மருக்கு.   நர சிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன்,* *சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.* . *7. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை.ஆனால் நரசிம்ம...

Venkadugu

குடும்ப அமைதிக்கு வெண்கடுகு..!!! ************************************* சமீபத்தில் நான் ஒரு சுவையான செய்தியைப் படித்தேன். அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு உபாசகர் கூறிய செய்தி இது ''பல குடும்...

ஆன்மீக ரகசியம்

♥ஆன்மிக - ரகசியங்கள் ♥செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்? செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நா...