Skip to main content

Posts

Showing posts from June, 2017

வெற்றியாே தாேல்வியாே இதை நினைவில் காெள்ளுங்கள்

*இதுவும் கடந்து போகும்..!!!* நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா? வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல.* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும...

ஹாேமம் என்றால் என்ன???

பல முகவரிகளுக்கு எழுதிய கடிதங்களை ஒரே தபால் பெட்டியில் போடுகிற மாதிரி, பல தேவதைகளுக்கு பலவிதமான திரவியங்களை மந்திரப் பூர்வமாக அக்னியில் விடுவதைத்தான் ஹோமம் என்கிறோம். அக்னி இவற்றை தானே எடுத்துக் கொள்ளாமல் இவற்றின் சாரத்தை அந்தந்த தேவதைக்கு அனுப்பி வைக்கின்கிறன என்பது காஞ்சி மகாப் பெரியவரின் மகாவாக்கு. நாம் செய்கிற ஹோமங்களில் திருப்தி அடைந்து நமக்கு அனுக்கிரகத்தை அள்ளித் தருகின்றனர், தேவர்கள். கடலிலுள்ள நீர் ஆவியாகி மீண்டும் மழையாகப்பொழிந்து வரும் சுழற்சியைப் போன்றதுதான் இந்த ஹோமங்கள். நமக்கு அருகேயுள்ள சக்திகளை தொடர்பு கொள்ள வைக்கும் விதம்தான் மந்திரப்பூர்வமான ஹோமங்கள். மந்திரங்களால் நிறைந்த பிரதேசங்களின் அலைவரிசை நம் மனதிற்கு பலத்தைக் கொடுக்கிறது. எங்கேயோ தடைபட்டிருந்த சக்திகளை மந்திர ரூபமாக உள்ள தேவர்கள் அகற்றுகின்றனர். பூமியில் உட்கார்ந்து கொண்டு அண்டத்திலுள்ள செயற்கைகோளை சரி செய்வதுபோன்ற ஒரு செயலை ரிஷிகள் அநாயாசமாக அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமாகும் விதமாக ஹோமங்களாக வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். இந்திராய ஸ்வாஹா… என்றால் அங்கு இந்திரன் வரவேண்டும், இது வேதத்தின் சத்தியக் கட்டளை. அழைக...

பரிகாரம் என்பது எப்படி செய்ய வேண்டும்???

பரிகாரம் என்றால் உண்மையில் என்னஎன்றுதெரி(புரி)யாதவர் களுக்காக இந்தக் கதை! "எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்… ஒன்னும் பிரயோஜனம் இல்லை எதுவும் நடக்கலே.. இதுக்கு மேல என்ன செய்றதுன்னே புரியலே…” – பல நேரங்களில் ஜோதிட ஆலோசனைகளின் பேரிலும் அல்லது தோஷங்களுக்காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது. பரிகாரம் தொடர்பான குட்டி கதை. ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார். நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது. அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது. மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி, வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி பாணத்தை செலுத்தினான். அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து “ஐயோ… அம்மா” என்ற குரல் கேட்டது. ஏதோ ஒரு மிருகத்தின் ஓலம் கேட்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி மனிதனின் ஓலம் கேட்கிறதே… யாரையோ தவறுதலாக கொன்றுவிட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தான். அங்கு சென்று பார்த்தால் பதின...

வீட்டில் என்னசெய்தால் செல்வம் பெருகும்...???

நீங்கள் வாடகை அல்லது சொந்த வீட்டுக்கு குடியேறும்போது,அந்த வீட்டுக்குள் முதலில் கொண்டு செல்ல வேண்டியவை மகாலட்சுமியின் அம்சமாகிய உப்பு,அம்மனின் அம்சமாகிய மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு,ஒரு நிறை குடம் தண்ணீர்,உங்களின் குல தெய்வத்தின் படம் அல்லது இஷ்ட தெய்வத்தின் படம் இவைகளைக் கொண்டு செல்ல வேண்டும். வீட்டில் பண வரவு அதிகரிக்க,வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 முதல் 6.15க்குள்ளும்,மதியம் 1.00 முதல் 1.15க்குள்ளும்,இரவு 8.00 முதல் 8.15க்குள்ளும் எதாவது ஒரு நேரத்தில்  வாரம்  ஒரு முறை கடையில் உப்பு வாங்கி வரவேண்டும்.இப்படி வாரா வாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர,செல்வச் செழிப்பு அதிகரிக்கும். கல் உப்புதான் மகா லட்சுமியின் அம்சமாகும். எந்த வீட்டினுள் நுழைந்ததும்,துர்நாற்றம் இல்லாமலிருக்கிறதோ,நறுமணம் கமழுகிறதோ,அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும். எந்த வீட்டில் அழுக்குத் துணிகள் வீடெல் லாம் இறைந்து கிடக்காமலிருக்கின்ற தோ, வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் தண்ணீரால் அலசி விடப்படுகிறதோ,பொருட்கள் எல்லாம் சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்குமோ,அங்கெல்லாம் செல்வம...

லக்ஷ்மி நரசிம்மரை வழிபடுவதால் அப்படி என்ன பலன் கிடைத்து விடும்?

*ஸ்ரீ நரசிம்மர் வழிபாடு:-* -------------------------------- *1. நரசிம்மரைத் தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.* *2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு     8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.* *3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி,    உயர் நிலையைப் பெற்றன.* *4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ``சிங்கவேள்குன்றம்'' என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.* *5. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.* *6. நரசிம்மருக்கு.   நர சிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன்,* *சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.* . *7. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை.ஆனால் நரசிம்ம...

யார் இந்த சப்த கன்னிகள் ???

#சப்த_கன்னியர்கள்_பிறந்த_கதையும்_அவர்களை_வழிபடும்_முறைகளும் #சப்தகன்னியர்கள்_பிறந்த_கதை அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி உண்டானவர்களே இந்த சப்த கன்னிகைகள்.மனித கர்ப்பத்தில் பிறக்காமலும்,ஆண் பெண் இணைவில் பிறக்காமலும்,அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே ப்ராம்மி,மகேஸ்வரி,கவுமாரி,வைஷ்ணவி,வராஹி, இந்திராணி,சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள். அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி.மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள்.அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவள்.மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள்.இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும்.(அசைவம் தவிர்க்க வேண்டும்.வீட்டிலும்,வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.)ஐ.ஏ.எஸ்.,வங்கிப்பணி,அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம். #பிராம்மியின்_காயத்ரி_மந்திரம் : ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே தேவர்ணாயை தீமஹி தன்னோ ப்ராம்ஹி ப்ரசோத...

யார் குரு....?????

ஞானத்தை யாரிடம் கற்பது? குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும் முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்  என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு. காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை. ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும். அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும். அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும். இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை. ஆனால், மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே? மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே? மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே… மனித மனம் குரங்கு அல்ல… என்ற புரிந்து கொள்ளுதல்தான்  ”ஞான உதயம்” இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது....

கடவுள் கூறும் ரகசியம்

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். Sri Rajiv sivam- 09894798969 கடவுள்: "வா மகனே....... .நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......." ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?" "மன்னித்துவிடு மகனே........ உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........." "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?" "உன்னுடைய உடைமைகள்........." "என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?" "இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........." "என்னுடைய நினைவுகளா?............." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........" "என்னுடைய திறமைகளா?..........." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது......... அவை சூழ்நிலைகளுடன் சம்...

குல தெய்வம் பூஜையின் பலன்கள்

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துகொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்றுசெய்துவிடமுடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும். குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது. பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும். உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒரு முறையோ தங்கள் வசதி ஏற்ப வருடம் ஒரு  முறையோ  கண்டிப்பாக . நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும்.மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும்,குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய்,பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள்.ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது.உங்கள...

அர்ச்சனை_பொருட்களும்_அர்த்தங்களும்

#அர்ச்சனை_பொருட்களும்_அர்த்தங்களும் 🌺 அர்ச்சனை, ஆராதனை இரண்டும் இறைவனுக்கு மிக முக்கியமாகும்.  எங்கும், எதிலும் நிறைந்தவன் இறைவன். நிம்மதி தேடி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சாமிக்கு அர்ச்சனை செய்ய தேங்காய், வாழைப்பழம் என நிறைய பூஜை பொருட்கள் வாங்கி சென்று இறைவனை தரிசித்து வருகின்றனர்.  இறைவனுக்கு ஏன் அர்ச்சனை பொருட்களை வைத்து படைக்கின்றனர் என்று தெரிந்துக் கொள்வது அவசியமாகும். #தேங்காய் : 🌺 தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும், கடினமாகவும் இருக்கும்.  அதை இரண்டாக உடைக்கும் போது வெண்மையான தேங்காய் பருப்பும், இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது.  அதுபோல் அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும் பொழுது வெண்மையான மனமும், அதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் இனிமையாகவும், அன்பாகவும் இருக்கும். #விபூதி : 🌺 நாமும் ஒரு நாளைக்கு சாம்பல் ஆகப்போகிறோம்.  ஆதலால் நான் தான் என்ற அகம்பாவமும், சுயநலமும், பொறாமையும் இருக்ககூடாது என்ற எண்ணத்தையும், சிந்தனையையும் நமக்கு உணர்த்தவே, விபூதியை நெற்றியிலும், உடம்பிலும் பூசிக்கொள்கிறோம். #வாழைப்பழம் : 🌺 வாழைப்பழத்தின் நட...

கோபூஜை பற்றிய விபரம் வேண்டுமா???

🐂 கோபூஜை பலன்கள் பசுவை பூஜை செய்வதே கோபூஜை. சகல தெய்வங்களும் பசுவின் உடலில் வீற்றிருப்பதாக ஐதீகம். பசுவிற்கு ஒரு பிடி புல்லோ, அகத்திக்கீரையோ கொடுப்பதை புண்ணிய செயலாக வேதம் குறிப்பிடுகிறது. கோமாதா பூஜை செய்வதால் உண்டாகும் பலன்களை இங்கு பார்ப்போம். 🐂 கோபூஜை செய்து வந்தால் வியாபாரம் விருத்தியடையும். நிலையான லாபம் கிடைக்கும். 🐂 நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் கோபூஜையை செய்வது சிறந்த பலனை அளிக்கும். 🐂 பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும். 🐂 கோமாதா பூஜையினால் செல்வச் செழிப்பு ஏற்படுகிறது. 🐂 கோமாதா பூஜையினால் வியாதிகள் நீங்கி ஆரோக்கிய வாழ்க்கை கிடைக்கிறது. 🐂 பசுவை வெள்ளிக்கிழமை பூஜித்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். 🐂 பிதுர் சாபம், ரிஷிகள் சாபம், மூதாதையர் சாபம் ஆகியவை கோபூஜை செய்வதால் நீங்குகிறது. 🐂 பசு உண்பதற்கு புல்கொடுத்தாலும், பசுவின் கழுத்துப்பகுதியில் சொறிந்து கொடுத்தாலும் கொடிய பாவங்கள் விலகும். 🐂 பசுவை பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் கிடைக்கு...

Ganapathi homam

கணபதி ஹோமமும் அதன் பயன்களும் கணபதி ஹோமம்:       கணபதி ஹோமம் என்பது முதற்கடவுளாகிய விநாயகருக்கு செய்யும் ஹோமம் ஆகும். இந்த கணபதி ஹோமம் செய்வதால் விநாயகர் அருள் பரிபூரணமாக கிடைக்கும். கணபதி ஹோமத்தால் கிடைக்கும் பயன்:          இந்த ஹோமனத்தினை மேற்கொள்பவர்கள் வாழ்வில் எந்த தடையும் இல்லாமல் நினைத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றி கொள்வர் . மேலும் இந்த ஹோமத்தினால் விநாயகர் அருள் கிட்டி சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம். எப்போது செய்வது:             இந்த கணபதி ஹோமம் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பாக ஒரு தொழில் துவங்கும் போது செய்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.  எடுத்த காரியம் வெற்றி பெரும். என்று செய்வது:            கணபதி ஹோமம் என்பது அதிகாலை நான்கு முதல் ஐந்து மணிக்குள் செய்து முடிக்க வேண்டும். குறிப்பாக வெள்ளி கிழமை அல்லது சதுர்த்தி நாள் அன்று செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். ஹோமத்தில் பயன்படுத்தும் பொருள்களின் பயன்:       ...