மேஷம் : உயர்ந்த எண்ணங்களை அடைய துடிக்கும் மேஷ ராசி அன்பர்களே! இராசி நாதன் செவ்வாய் ஆட்சி பெற்றமையால் விரும்பிய செயலை செய்து முடிப்பீர்கள். செய்த காரியத்தின் பலனாக அதற்கான கீர்த்திகள் உண்டாகும். திறமையான பேச்சுகளால் நன்மை உண்டாகும். எண்ணிய முயற்சிகளில் இருந்த காரியத்தடைகள் நீங்கும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். சுபவிரயச் செலவுகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளால் சேமிப்பு அதிகரிக்கும். எண்ணிய கடன் உதவிகள் கைகூடும். விளையாட்டு வீரர்களுக்கு அனுகூலமான செயல்கள் நடைபெறும். செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். கல்வி பயிலும் மாணவர்கள் பேச்சுகளை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். நண்பர்களின் ஆதரவால் ஆதாயம் உண்டாகும். கூட்டாளிகள் மூலம் தொழில் அபிவிருத்தி செய்வீர்கள். இறைவழிபாட்டு பயணங்களை மேற்கொள்வீர்கள். உடன்பிறப்புகளால் நிர்வாக உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகளால் எண்ணியவை ஈடேறும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். வாகன பராமரிப்பு செலவுகளை மேற்கொள்வீர்கள். பரிகாரம் : பெருமாளை சனிக்கிழமையன்று வழிபட்டு வரவும்.
ரிஷபம் : அனைவரிடமும் பழகும் இயல்பு கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! எண்ணங்களுக்கு செயல் வடிவம் அளித்து மகிழ்வீர்கள். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் இலாபம் அதிகரிக்கும். தேவையற்ற வீண் செலவுகளை தவிர்ப்பதன் மூலம் பண நெருக்கடியை தவிர்க்கலாம். தொழிலில் வாரிசுகளின் ஆதரவுகள் உண்டாகும். புதிய மனைகள் மற்றும் வீடுகள் வாங்கும் முயற்சிகளில் சுப செய்திகள் கிட்டும். தொழில் கூட்டாளிகளிடம் கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். அந்நியர்களால் குடும்ப பிரச்சனைகள் வந்து போகும். பயணங்களால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உடல் சோர்வு தோன்றி மறையும். பொதுக்கூட்ட பேச்சுகளில் எதிர்பார்த்த ஆதரவு பெருக காலதாமதமாகும். பணியில் எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். பணம் மற்றும் பொன் போன்ற பொருட்களை கையாளும் போது கவனத்துடன் செயல்படவும். தந்தையிடம் அனுசரித்து செல்ல வேண்டும். பெரியோர்களிடம் பகைமையை தவிர்த்து அன்புடன் பழகவும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். பரிகாரம் : செவ்வாய்க்கிழமையில் முருகனுக்கு மலர்களால் பூஜை செய்து வழிபட்டால் இல்வாழ்க்கையில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.
மிதுனம் : பல்வேறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி அன்பர்களே! இராசி அதிபதியான புதன் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் பிரவேசிக்க இருப்பதால் இதுவரை ஏற்பட்ட பல இன்னல்களுக்கு முடிவு காண்பீர்கள். நிர்வாக சம்பந்தமான முடிவுகளில் தந்தையின் ஆதரவால் சுமூகமான முடிவு உண்டாகும். செய்தொழிலில் புதிய வேலை ஆட்களை நியமனம் செய்வீர்கள். மனைகளில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான சூழல் உண்டாகும். உடல் நலத்தில் இருந்த ஆரோக்கிய குறைகள் நீங்கும். நண்பர்களுடன் பழகும் போது பேச்சுகளில் கவனம் வேண்டும். மறைமுக எதிர்ப்புகளை கடந்து புதிய வியூகத்துடன் எண்ணிய திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு இதுவரை இருந்த பணிச்சுமை குறையும். பெரியோர்களின் ஆதரவு உண்டாகும். பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகை உண்டாகலாம். தாய்மாமன் உறவுகளால் சாதகமான சூழல் உண்டாகும். மனைவியின் மூலம் ஆதரவுகள் உண்டாகும். தலைமைப் பதவியில் உள்ளோர்களிடம் நட்புகள் உண்டாகும். பரிகாரம் : வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் தன வரவில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.
கடகம் : கால நிலைக்கு தகுந்தார் போல் தன்னை மாற்றி அமைத்து கொள்ளும் கடக ராசி அன்பர்களே! தெளிவற்ற எண்ண ஓட்டங்களினால் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். எண்ணங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளை தவிர்த்து கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் உண்டாகும். தனவரவுகளால் மேன்மையான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளால் பாராட்டுகள் உண்டாகும். கடன் பிரச்சனைகளை குறைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தந்தையின் உடல்நலனில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மனைவியின் உறவுகளால் சுபவிரயம் உண்டாகும். வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்த அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். மனதில் இருந்த நீண்ட நாள் கவலைகள் குறைவதற்கான சூழல் உண்டாகும். பூமி விருத்திக்கான கடன் வாய்ப்புகள் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். இறை வழிபாட்டில் மனம் லயிக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் ஆதரவுகள் உண்டாகும். பொதுச் சேவையில் ஈடுபடுவோருக்கு சாதகமான நிலைகள் உண்டாகும். சக ஊழியர்களிடம் பணியில் அனுசரித்து செல்லவும். பரிகாரம் : உடல் ஊனமுற்றோருக்கு உதவுதல் மற்றும் இரத்த தானம் செய்வதன் மூலம் எண்ணங்களில் தெளிவு உண்டாகும்.
சிம்மம் : துடிப்புமிக்க சிம்ம ராசி அன்பர்களே ! இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கி உடல் ஆரோக்கியம் பலம் பெறும். மாத துவக்கத்தில் இருந்தே பொருளாதார நிலை சீர் அடையும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். தாயிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வாகன யோகம் கைகூடும். மனைவி வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மாதத்தின் பின் பகுதியில் சேமிப்புகள் கரையும். பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் உண்டாகும். கூட்டு தொழில் முயற்சி வெற்றியை தரும். வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்களால் நல்ல அனுகூலங்கள் கிடைக்கும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். வெளிவட்டார புகழ் அதிகரிக்கும். மாதத்தின் இறுதி பகுதியில் மூத்த சகோதரர்களிடம் வருத்தங்கள் தோன்றி மறையும். பொது வாழ்வில் ஈடுபடுவோர்க்கு விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். மாணவர்களின் கல்வி நிலை மத்திமமாகவே அமையும். பெண்கள் பெருமைப்படக்கூடிய செயல்களில் ஈடுபடுவார்கள். பரிகாரம் : முகம் மாறிய தெய்வ வழிபாடு சிறப்பு.
கன்னி : மாற்றங்களை விரும்பும் கன்னி ராசி அன்பர்களே ! ராசிநாதன் புதன் பகவான் 6ல் மறைவதாலும் மாதத்தின் இறுதியில் நீசம் பெறுவதாலும், காரிய தடைகள் ஏற்பட்டு விலகும். எதிலும் சற்று பொறுமை தேவை. தொழில்துறை நண்பர்களிடம் பொறுமையை கடைபிடிப்பது அவசியமாகும். பிள்ளைகள் வழியில் சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். பூர்வீக சொத்துக்களில் பாகப் பிரிவினையின் பொருட்டு வருத்தங்கள் உண்டாகும். எவ்வளவு சோதனைகள் வந்தாலும் மனதில் தன்னம்பிக்கை மேலோங்கும். முயற்சிக்கேற்ற வெற்றி உண்டாகும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்வதே சிறப்பு. தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நற்பெயருக்காக சில பொருளாதார விரயங்களை சந்திக்க வேண்டி இருக்கும். மனதில் உள்ளுணர்வு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூமி விற்பனையின் மூலம் தனவரவுகள் உண்டாகும். கணவன் - மனைவி உறவில் அமைதி தேவை. திடீர் பயணங்களால் யோகங்கள் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் அதிக முக்கியத்துவத்தை தருவது அவசியமாகும். பணிபுரிபவர்கள் மேலதிகாரியிடம் நற்பெயர் பெறுவார்கள். பரிகாரம் : புதன்கிழமை தோறும் ஸ்ரீராமரை வழிபடுவது நற்பலனை தரும்.
துலாம் : கற்பனை திறன்மிக்க துலாம் ராசி அன்பர்களே ! ராசிநாதன் சுக்கிர பகவான் திரிகோணத்தில் நட்பு வீட்டில் நிற்பதால் நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நடக்கும். ஆடை ஆபரண, சொத்து சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண யோகம் கைகூடும். பூர்வீக சொத்துக்களினால் தனவரவுகள் ஏற்படும். தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நற்பெயருக்கு சங்கடங்கள் உண்டாகும். மூத்த சகோதரர்களின் ஆதரவு பெருகும். புதிய சொத்து சேர்க்கையின் பொருட்டு சேமிப்பு கரையும். ஆரோக்கியம் சீரடையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பணியில் உள்ளவர்களுக்கு பெருமைகள் வந்து சேரும். முயற்சிகள் கைகூடும். மாத இறுதியில் நீண்ட காலமாக எதிர்பார்த்த அனுகூலமான பதில்கள் வந்து சேரும். பெண்கள் பெருமை கொள்வார்கள். பொது வாழ்வில் உள்ளவர்கள் அமைதியை கடைபிடிப்பது அவசியமாகும். பேச்சில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் மேன்மை பெறுவார்கள். வியாபாரிகள் அமைதியை கடைபிடிப்பது அவசியமாகும். பரிகாரம் : குரு ராகவேந்திரரை வழிபட்டு வந்தால் சகல நன்மைகளும் பெறலாம்.
விருச்சிகம் : வேகம் மிகுந்த விருச்சிக ராசி அன்பர்களே ! ராசிநாதன் செவ்வாய் பகவான் ராசியிலேயே ஆட்சி பெறுவதால் பேச்சு மற்றும் செயலில் வேகம் அதிகரிக்கும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு கூடும். முயற்சிக்கேற்ற வெற்றி அமையும். இளைய சகோதர ஆதரவு சிறப்பாக அமையும். உறவில் திருமணம் அமையும். நண்பர்களின் ஆதரவு உண்டு. மனைவி வழி உறவில் ஆதாயம் ஏற்படும். பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுக்காக மருத்துவ செலவு செய்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கம் மாறி, பணம் கைக்கு வந்துசேரும். பேச்சில் கவனம் தேவை. வாடகை தரும் சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். போட்டி தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு வெற்றி அமையும். வாகன பயணங்களில் எச்சரிக்கை தேவை. அண்டை அயலாரிடம் வருத்தங்களை தவிர்ப்பது சிறப்பு. தந்தை வழி உறவினர்களிடம் நெருக்கத்தை தவிர்ப்பது நன்மை தரும். மூத்த சகோதர, சகோதரிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். பொது வாழ்வில் உள்ளவர்கள் பொறுமையை கடைபிடித்தல் நலம். மாணவர்கள் உடல்நலனில் அக்கறை தேவை. விளையாட்டு துறையினர் பயிற்சியின்போது கவனமுடன் செயல்படுதல் சிறப்பு. பெண்கள் தந்தை வீட்டில் பலம் பெறுவார்கள். பரிகாரம் : சங்கடஹர சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.
தனுசு : தனிவழியை நாடும் தனுசு ராசி அன்பர்களே ! ராசிநாதன் குருபகவான் 11ல் நிற்பது சிறப்பு. இருப்பினும் ராசியில் சனிபகவான் நிற்பதால் காரிய தடைகளும், உடல் சோர்வும் ஏற்படும். வாக்கு பலிதம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தந்தை மற்றும் குலத்தொழிலை செயல்படுத்த நேரிடும். முயற்சிகளை அதிகரிப்பது அவசியம். உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். மனைவியிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது சிறப்பு. பிரிவினைக்கு வழிவகுக்கும். பயணங்களில் அக்கறை தேவை. தந்தையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். வெளியூர் மற்றும் வெளிநாட்டு வேலை அமையும். இருப்பினும் சிறு செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் எதிர்பாலின நண்பர்களுடன் எச்சரிக்கையுடன் பழகுவது சிறப்பு. நண்பர்களால் சில சங்கடங்கள் உருவாகும். வியாபாரிகள் பொறுமை காப்பது அவசியம். மாணவர்கள் கல்வியில் முயற்சியை அதிகரிக்கவும். பெண்களுக்கு சம வயதினரிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். சகோதரர்களிடம் கொடுக்கல் வாங்கலை தவிர்ப்பது சிறப்பு. குலதெய்வ நேர்த்திகடன்களை செலுத்தி மகிழ்வீர்கள். விருந்து, கேளிக்கைகளில் ஈடுபட்டு, மன மகிழ்ச்சி உண்டாகும். பரிகாரம் : அஷ்டமியன்று சனிபகவானை வழிபடுவது சிறப்பு.
மகரம் : சூழ்நிலைக்கேற்று பக்குவமாக நடந்து கொள்ளும் மகர ராசி அன்பர்களே ! ராசியிலேயே கேது பகவான் நிற்பதால் ஆன்மிக பயணங்கள் சென்று வருவீர்கள். இறை ஆற்றல் அதிகரிக்கும். அதீத உள்ளுணர்வு ஏற்படும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு புதிய உறவில் திருமண வாய்ப்புகள் அமையும். பேச்சில் அமைதியும், பொறுமையும் தேவை. குடும்ப உறுப்பினர்களின் பூரண ஒத்துழைப்பு சரிவர அமையாது. வெளிவட்டாரத்தில் அமைதியை கடைபிடிக்கவும். உடல்நலனில் அக்கறை தேவை. மருத்துவ செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் பெருமைகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களில் ஆதாயம் உண்டாகும். தந்தையிடம் அமைதியை காக்கவும். தந்தையின் உடல்நலனில் அக்கறை தேவை. மூத்த சகோதரர்களிடம் பொறுத்துச் செல்வது சிறப்பு. எதிர்பாராத பழைய பிரச்சனைகள் வருத்தத்தை ஏற்படுத்தும். பணியில் உள்ளவர்கள் இடமாற்றம் பெறுவார்கள். பொது வாழ்வில் உள்ளவர்கள் விமர்சிக்க படுவார்கள். விமர்சனங்களுக்கு காது கொடுக்காமல் செல்வதே உத்தமம். வியாபாரிகளுக்கு தொழிலில் போட்டி அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். பெண்களின் பேச்சிற்கு குடும்பத்தில் அதிக மதிப்பு உண்டாகும். பரிகாரம் : சிவாலய வழிபாட்டை திங்கட்கிழமை அன்று மேற்கொள்வது சிறப்பு.
கும்பம் : சிறப்புகள் மிகுந்த கும்ப ராசி அன்பர்களே ! ராசிநாதன் சனிபகவான் 11ல் நிற்பதாலும், குருபார்வை ராசிக்கு இருப்பதாலும் எடுத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தப்படியே நடக்கும். காரிய வெற்றி உண்டாகும். முயற்சிக்கேற்ற வெற்றி கிடைக்கும். சுயதொழில் அமையும். போட்டி பந்தயங்களில் ஈடுபடுபவர்கள் வெற்றி பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். வேலை தேடுவோருக்கு வேலைவாய்ப்புகள் அமையும். எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். தொழில் வாய்ப்புகள் சிறப்படையும். பொது வாழ்வில் உள்ளவர்கள் சிறப்படைவார்கள். ராசியிலேயே சூரியன் நிற்பதால் மனைவியின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. போட்டி தேர்வுகள் வெற்றி தரும். ஆன்மிக யாத்திரை சென்று வருவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்கள் நற்பெயரும், பாராட்டும் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்படைவார்கள். தொழில் சிறப்படையும். பெண்கள் மேன்மை அடைவார்கள். பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். பரிகாரம் : துர்க்காதேவி வழிபாடு நன்மை தரும்.
மீனம் : பொறுமைமிக்க மீன ராசி அன்பர்களே ! ராசிநாதன் 8ல் மறைவதால், காரிய தடங்கல் ஏற்பட்டு நீங்கும். எதிர்கால சிந்தனை மேலோங்கும். பழைய பிரச்சனைகள் மனதை வாட்டும். முயற்சியை அதிகரிப்பது சிறப்பு. எதிர்பாராத திடீர் பணவரவுகள் வந்து சேரும். உறவினர்களிடம் சற்று விலகிச் செல்வதே சிறப்பு. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். நண்பர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் தொழில் முடக்கம் ஏற்பட்டு விலகும். பிள்ளைகளுக்காக செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் விரயமும், பிரச்சனையும் உண்டாகும். வெளிவட்டார புகழ் அதிகரிக்கும். மூத்த சகோதர வழியில் விரக்தி ஏற்படும். சேமிப்பு கரையும். மேலதிகாரிகளிடம் இருந்து வந்த கசப்பு மாறும். பொதுவாழ்வில் உள்ளவர்கள் புகழ் பெறுவார்கள். தந்தையிடம் கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்பு அதிகரிக்கும். பணியில் உள்ளவர்கள் மாற்றம் அடைவார்கள். குடும்ப உறுப்பினர்களின் உதவிகள் கிட்டும். தனவரவுகள் சிறப்படையும். பதவி உயர்வுகள் தேடி வரும். குலதெய்வ வழிபாடு சிறப்பை ஏற்படுத்தும். பித்ரு காரியங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பரிகாரம் : வியாழக்கிழமைதோறும் குரு தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நற்பலனை தரும்.
Comments